Thursday 7 August 2008

கோடை நாடகப் பயிற்சி முகாம் 2008



மாற்று நாடக இயக்கத்தின் நாடகப் பயிற்சிப் பட்டறை இவ்வாண்டும் எட்டு நாட்கள் உண்டு உறைவிடப் பயிற்சி முகாமாக நடைபெற்றது. மே 2008 , 31 ஆம் தேதி மாலை தொடங்கிய இப்பயிற்சி ஜூன் 8 அன்று முடிவுற்றது. சென்னை மூன்றாம் அரங்கு நாடகக் குழுவின் நிறுவனர் கே.எஸ். கருணாபிரசாத், ஆழி.வெங்கடேசன், தஞ்சைப் பல்கலைக் கழக நாடகத்துறை ஆய்வாளர் கார்த்தி, ஓவியர் எழில், வீதிநாடகக் கலைஞர் சாமுவேல், பேரா.கி.பார்த்திபராஜா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.