
Monday, 8 February 2010
புதிய நாடகத் தயாரிப்பு

Sunday, 10 January 2010
புரிசை தெருக்கூத்துப் பயிற்சிப் பள்ளியில் வகுப்புகள் தொடக்கம்:2010

புரிசை கண்ணப்பத் தம்பிரான் பரம்பரைத் தெருக்கூத்து மன்றம் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தெருக்கூத்துப் பயிற்சிப்பள்ளியை நடத்தி வருகிறது. கணிசமான ஆண்களும் பெண்களுமாக மாணவர்கள் அப்பள்ளியில் கூத்தினைக் கற்று மேடையாக்கத்தையும் நிறைவு செய்துள்ளனர். இந்த 2010 புத்தாண்டில் பள்ளி, தனது புதிய கூத்துப்பயிற்சியினைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது. சனவரி மாதம் 30 ஆம் தேதி தொடங்கும் இப்பயிற்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நாட்களும் அளிக்கப்படுகிறது. தொடர்ந்து 15 வாரகால பயிற்சிகளுக்குப் பிறகு, மேடையாக்கமும் காண்கிறது. இளைய தலைமுறையினரிடத்தே, நமது பெருமை மிக்க கலையாகிய தெருக்கூத்தை எடுத்துச் செல்லும் இந்த மிக முக்கியமான பணியில் நாமும் உதவலாம். ஆர்வமுடைய கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்களுக்கு நீங்கள் இப்பயிற்சியைப் பரிந்துரை செய்யலாம். கட்டணம் மிகக் குறைவே.புரிசை கிராமம் செய்யாறுக்கும் வந்தவாசிக்கும் இடையே உள்ளது. ஆர்வமும் அக்கறையும் உடையவர்கள் உடனடியாக கூத்துப் பள்ளியின் தலைவர் திரு காசித் தம்பிரான் அர்களைத் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: (+91) 044 24742743.
வாருங்கள்! கலை வலு மிக்க தெருக்கூத்தை, நம் பாரம்பரியத் தமிழ் அரங்கை, புதிய உத்வேகத்தோடும் புதிய உள்ளடக்கங்களோடும் ஏந்திச் செல்லக் கிடைக்கும் நல்ல வாய்ப்பைப் பயன்படுத்துவோம்..
கி.பார்த்திபராஜா
Friday, 11 December 2009
பயிற்சிப் பட்டறை
மாற்று நாடக இயக்கம் actor's preparation என்ற பொருண்மையில் ஒரு நாள் நாடகப் பயிற்சியைக் கல்லூரி மாணவர்களுக்கென நடத்தவிருக்கிறது. 16.12.2009 அன்று நிகழ இருக்கும் இந்த பயிற்சிப் பட்டறையில் நடிகர் ஜெயகுமார், ஸ்ரீராம், அர்ச்சனா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க இருக்கின்றனர்.
புதிய நாடகத் தயாரிப்பு
மாற்று நாடக இயக்கம் 2010 சனவரியில் மேடையேற்றத்திற்கான புதிய நாடகப் பயிற்சியில் இருக்கிறது. ஜே.பி.பிரீட்ஸ்லியின் 'தி இன்ஸ்பெக்டர்ஸ கால்ஸ்' என்ற நாடகத்தை, எழுத்தாளர் ஞாநியின் தமிழ்த்தழுவலில் 'ஒரு விசாரணை' என்று அரங்கேற்றவிருக்கிறது.
Thursday, 13 August 2009
Saturday, 8 August 2009
Sunday, 11 January 2009
நாடகப் பிரதி உருவாக்கப் பயிற்சி
டாக்டர். கே.எஸ்.இராஜேந்திரன் (பேராசிரியர், தேசிய நாடகப்பள்ளி, புதுதில்லி).தமிழ்நாட்டிலிருந்து...
01.சி.அண்ணாமலை (விமர்சகர்)
02.டாக்டர் ஜீவா(பாரதியார் பல்கலைக்கழகம்)
03.திருமதி உஷா (அரங்கச் செயல்பாட்டாளர்)
04.டாக்டர் கி.பார்த்திபராஜா (மாற்று நாடக இயக்கம்)
05.திருமதி கிரிஜா(அரங்கஸ்ரீ)
06.திரு.குமரன்(அரங்கச் செயல்பாட்டாளர்)
07.திருமுகுந்தன்(ஆய்வு மாணவர்)
08.செல்வி.ஜானகி (அரங்கச் செயல்பாட்டாளர்)
Subscribe to:
Posts (Atom)